திரையுலகத்தை விட்டு போக போகிறாரா ராஷ்மிகா மந்தனா? கண் கலங்கி பேட்டி!!

0
திரையுலகத்தை விட்டு போக போகிறாரா ராஷ்மிகா மந்தனா? கண் கலங்கி பேட்டி!!
திரையுலகத்தை விட்டு போக போகிறாரா ராஷ்மிகா மந்தனா? கண் கலங்கி பேட்டி!!

தற்போது சோசியல் மீடியாவில் எழுந்து வரும் விமர்சனங்கள் வருத்தமளிக்கிறது என்று ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார்.

ராஷ்மிகா மந்தனா :

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கொடி கட்டி பறந்து வருபவர் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா. தற்போது விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். கடந்த ஜனவரி 11ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம் தற்போது வரை வெற்றி நடை போட்டு வருகிறது. மேலும் இந்த திரைப்படம் உலக அளவில் 250 கோடிகளை வசூலித்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். அண்மையில் இவர் கன்னட திரையுலகத்தை அவமதித்து பேசியதால் கன்னட படத்தில் நடிக்க அவருக்கு தடை விதித்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்நிலையில் ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் கூறியதாவது, எனக்கு சில விஷயங்கள் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தி வருகிறது. சொல்லப்போனால் என்னால் தாங்க முடியாத அளவுக்கு வேதனையை தருகிறது. மேலும் நான் பேசாத விஷயங்களை குறித்து என்னைப் பற்றி பல விமர்சனங்கள் சோசியல் மீடியாவில் எழுந்து வருகிறது. அவர்களின் விமர்சனங்கள் என்னை பெரிதும் வேதனைப் படுத்துகிறது. என்னைக் குறித்து எழுந்து வரும் தவறான செய்திகளால் எனது உறவினர்கள் நண்பர்களும் கவலைப்பட்டு வருகிறார்கள்.

அர்ஜுன் டெண்டுல்கர் தான் அதிர்ஷ்டசாலி…, சர்பராஸ் கானின் சிறு வயது நினைவை பகிர்ந்த தந்தை!!

மேலும் ஒல்லியாக இருந்தால் ஏன் ஒல்லியாக இருக்கிறார் என்கிறார்கள், குண்டாக இருந்தால் ஏன் குண்டாக இருக்கிறார் என்கிறார்கள், பேசாம இருந்தால் திமிரு என்கிறார்கள். அவர்களுக்கு என்னதான் பிரச்சனை என்று எனக்கு தெரியவில்லை. ஒருவேளை நான் சினிமாவை விட்டு விலக வேண்டும் என்று நினைக்கிறார்களா எனவும் தெரியவில்லை. இப்படி நீங்கள் கூறும் விமர்சனங்கள் என்னை மனரீதியாக ரொம்ப புண்படுத்துகிறது என்று ராஷ்மிகா மந்தனா வேதனை அடைந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here