சம்பள சர்ச்சை குறித்து மனம் திறந்த ராஷ்மிகா மந்தனா.. அதுக்குன்னு இவ்ளோ ஒப்பனவா பேசுவீங்க!!

0
தென்னிந்திய நடிகைகளில், டாப் ஹீரோயினாக திகழ்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. தற்போது அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா தி ரைஸ் என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இதன் முதல் பார்ட் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், பார்ட் 2 க்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்நிலையில் ராஷ்மிகா ஓர் படத்திற்கு 4 கோடி வரை சம்பளம் கேட்கிறார் என்ற தகவல்கள் இணையத்தில் உலா வந்தன.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் தனது அதிகாரப்பூர்வ X தளத்தில் ஓர் முக்கிய பதிவை பதிவிட்டுள்ளார். அதில் நான் சம்பளத்தை உயர்த்தியதாக யார் சொன்னது, இப்படி செய்தி வருவதை பார்த்த பிறகு தான் அப்படி செய்யலாம் என தோன்றுகிறது. மேலும் தயாரிப்பாளர்கள் கேட்டால் மீடியாவில் அப்படி சொல்கிறார்கள் அதனால் தான் என சொல்லப் போகிறேன் என்று தெரிவித்துள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் என்னங்க இவ்வளவு ஓப்பனா பேசிட்டீங்க என்று கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here