நடிகை ராஷ்மிகா பக்கத்துல யாராவது போனா இவருக்கு கோவம் வந்துருமாம்…!யாருன்னு நீங்களே பாருங்க!!!

0

கீதா கோவிந்தம் படத்தில் விஜய் தேவரகொண்டா உடன் நடித்து புகழ் பெற்றவர் நடிகை ராஷ்மிகா. தற்போது அவர் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் தன்னுடைய லிப்ஸ்க்கு லிப்ஸ்டிக் போடும் போது அந்த லிப்ஸ்டிக் பிரஷை ரஷ்மிகாவின்  நாய் கவ்வுகிறது. மேலும் இந்த புகைப்படத்தோடு,’ தன்னுடைய பக்கத்தில் யாராவது நெருக்கினால் இவர் வெறுப்படைகிறார்’ என்று தலைப்பிட்டு உள்ளார்.

கன்னட திரையில் கிரிக் பார்ட்டி என்ற படத்தின் மூலம் திரை உலகிற்கு வந்தவர் நடிகை ராஷ்மிகா. அதன் பிறகு தெலுங்கு,கன்னடம் போன்ற மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். இருப்பினும் அவருக்கு பெரும் புகழ் பெற்று தந்தது தெலுங்கில் வெளியான விஜய் தேவர் கொண்டா அவருக்கு ஜோடியாக மிக வித்தியாசமான கதை களத்தை கொண்ட கீதா கோவிந்தம் என்ற படத்தின் மூலம் மக்கள் மத்தியில் மிக பிரபலமானார்.இந்த படம் மிகுந்த வெற்றி பெற்றதை அடுத்து பல மொழி படங்களில் கமிட் ஆகி  நடித்து வருகிறார்.தமிழில் அவருக்கு முதல் படமாக அமைந்த படம் கார்த்திக்கு ஜோடியாக  சுல்தான் படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது, தன்னுடைய செல்ல பிராணி மடியில் இருக்க, மேக்கப் கலைஞர் இவரின்  லிப்ஸ்க்கு  மேக்கப் போடும் போது அந்த லிப்ஸ்டிக் பிரஷை அவரின்  நாய் வாயால் கவ்வுகிறது இந்த புகைப்படத்தை  தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு, அதனுடன் சேர்ந்து தன் அருகில் யாரேனும் வந்தால் அவரை தன்னுடைய இந்த நாய் வெறுக்கிறது என பதிவிட்டு உள்ளார். அவரின் இந்த பதிவு மற்றும் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. மேலும் பல லைக்ஸ்களை பெற்று வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here