சமீபகாலமாக உலகம் முழுவதும் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் வழக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் மனித சமுதாயத்தின் பாதுகாப்பு மிகவும் மோசமாகி விட வாய்ப்புள்ளது என எலான் மஸ்க், சுந்தர் பிச்சை போன்ற பல ஜாம்பவான்களும் எச்சரித்து வருகின்றனர். இந்த நிலையில் AI தொழில்நுட்பத்தில் Deep Fake Edit டூல் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட நடிகை ராஷ்மிகாவின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இது தொடர்பாக ராஷ்மிகா கூறுகையில், “தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துவதை பார்த்தால், எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது. என்னுடைய பள்ளி, கல்லூரி காலங்களில் இதுபோல சம்பவம் நடந்திருந்தால், என்னால் எப்படி சமாளிக்க முடியும்.” என வருத்தம் தெரிவித்து உள்ளார்.