பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் போட்டியாளராகச் செல்வீர்களா – ரம்யா பாண்டியன் பதில்..!

0

நடிகை ரம்யா பாண்டியன் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் போட்டியாளராகச் செல்வீர்களா என்ற ரசிகரின் கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

நடிகை ரம்யா பாண்டியன்..!

ரம்யா பாண்டியன் தமிழ் திரையுலகில் டம்மி டப்பாசு படத்தின் மூலம் அறிமுகமானவர். ராஜூமுருகன் இயக்கத்தில் வெளியான ஜோக்கர் படத்தின் மூலம் பிரபலமானார். தற்போது சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் படத்திலும் சி.வி.குமார் தயாரிக்கும் படமொன்றிலும் நடித்து வருகிறார்.

படங்களைத் தாண்டி இவர் விஜய் தொலைக்காட்சியின் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானார். மேலும் சமூக வலைதளத்தில் இவருடைய போட்டோ ஷூட்டுக்கு தனி ரசிகர் பட்டாளம் உண்டு.

ரசிகர்களின் கேள்விக்கு ரம்யா பதில்..!

ரம்யா பாண்டியன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு வீடியோ வடிவில் பதிலளித்துள்ளார். தனக்குப் பிடித்த நடிகர் விஜய் என்றும் எப்போதுமே ரஜினி ரசிகை எனவும் ரம்யா பாண்டியன் தெரிவித்துள்ளார். மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் போட்டியாளராகச் செல்லவுள்ளீர்களா என்ற கேள்விக்கு ரம்யா பாண்டியன் தெரியவில்லை என்றும் இன்னும் பிக் பாஸ் நிகழ்ச்சி தரப்பிலிருந்து என்னை யாரும் தொடர்பு கொள்ளவில்லை. அப்படித் தொடர்பு கொண்டால் தானே சொல்ல முடியும் என்று பதிலளித்துள்ளார்.

ஷகிலாவின் வாழ்க்கை வரலாறு படம் ஓடிடி-யில் ரிலீஸ் – வெளியான தகவல்..!

இதனை தொடர்ந்து புதிய போட்டோ ஷூட் ஒன்று எடுத்துள்ளதாகவும் விரைவில் அதை அப்டேட் செய்யவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here