ராஜமாதாவை கொச்சையாக திட்டிய வனிதா? –  கடுப்பான முன்னணி நடிகர்!!

0

தொலைக்காட்சி, இணையம் என தற்போது எங்கு பார்த்தாலும் வனிதா விஜயகுமாரின் பேச்சுத்தான் அடிப்படுகிறது. இவரது குடும்ப வாழ்வில் ஏற்பட்ட பிரச்சனைகள் கூட இணையத்தில் சர்வ சாதாரணமாக வைரல் ஆவது வழக்கம்.

சமீபத்தில் கூட விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் இருந்து அதிரடியாக வெளியேறினார். நடுவர் ரம்யா கிருஷ்ணன், அம்மன் கெட்டப் போட்டு வனிதா ஆடிய நடனத்தை பற்றி நெகடிவ் கமெண்ட்ஸ் கூறியதால் கோபமடைந்து அந்நிகழ்ச்சியில் இருந்து வனிதா வெளியேறினார்.

 இது பெரிய சர்ச்சையாக வெடித்ததை தொடர்ந்து, வனிதா தன் இன்ஸ்டா பக்கத்தில் ஒரு பெண் தான் இன்னொரு பெண்ணுக்கு எதிரி. எனக்கு உரிய மரியாதை இல்லாததால் அந்நிகழ்ச்சியை விட்டு வெளியேறுவதாக அறிவித்தார். இதை பற்றி ரம்யா கிருஷ்ணன் தரப்பில் இருந்தும் தெளிவான விளக்கம் கொடுக்கவில்லை.

இந்நிலையில் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியின் மற்றொரு நடுவரான நகுல் இச்சம்பவத்தை பற்றி பேசியுள்ளார். நாங்கள் கூறிய கமெண்ட்ஸ் வனிதாவுக்கு பிடிக்கவில்லை. மேலும் வனிதா எங்களை ஒரு கொச்சையான பெயரை சொல்லி திட்டியதாக அங்கு இருந்தவர்கள் கூறியதாகவும் கூறியுள்ளார்.

மேலும் இத்தனை வருட அனுபவம் நிறைந்த ஒரு சீனியர் ஆர்ட்டிஸ்ட் ஆன ரம்யா கிருஷ்ணன் அவர்களை அவ்வாறு பேசியதற்கு வனிதா மன்னிப்பு கேக்கவேண்டும் என்றும் நகுல் கூறியுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here