“வயசானாலும் உங்க அழகு இன்னும் உங்கள விட்டு போகல”.., விஜய் டிவி பிரபலத்திற்கு வந்த வாழ்த்து!!

0
விஜய் டிவிக்கு பிடிச்ச கிரகமா இது.., இனி மீள்வது கொஞ்சம் கஷ்டம் தான் - என்ன நடக்க போகுதோ?

பிரபல முன்னாள் நடிகை ரம்யா கிருஷ்ணன் தனது 52 வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.

நடிகை ரம்யா கிருஷ்ணன்:

சினிமா வரலாற்றில் வில்லி கதாபாத்திரத்தை ஸ்டைலாக நடித்து பிரபலமானவர் தான் நடிகை ரம்யா கிருஷ்ணன். அவர் ஏகப்பட்ட படத்தில் நடித்திருந்தாலும், மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த திரைப்படம் என்றால் அது படையப்பா தான். இதில் ரஜினிக்கு இணையாக வசனங்கள் பேசி மாஸ் காட்டியிருப்பார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அந்த வகையில் “வயசானாலும் உன் ஸ்டைலும், அழகும் இன்னும் உன்னை விட்டு போகலை” என்ற வசனம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் கிட்டத்தட்ட 260 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.இதனை தொடர்ந்து விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகளில் நடுவராக பணியாற்றி வருகிறார்.

அண்மையில் நடந்த பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் நடுவராக இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது குணச்சித்திர கதாபாத்திரத்தில் தொடர்ந்து நடித்து வருகிறார். சினிமாத்துறையில் 30 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் நடிகை ரம்யா கிருஷ்ணன் தனது 52 வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிக பெரு மக்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here