தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக ஜொலித்து வந்தவர் தான் ரம்பா. கோலிவுட் சினிமாவில் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்த இவர் பிரபல ஹீரோக்கள் பலருடன் ஜோடி போட்டு நடித்து ஏகப்பட்ட ஹிட் படங்களை ரசிகர்களுக்கு கொடுத்து வந்தார். மேலும் இவர் தமிழ் மட்டுமல்லாது ஹிந்தி, பெங்காலி, கன்னடம் உள்ளிட்ட பழமொழிகளில் ஹீரோயினாக நடித்து புகழின் உச்சியில் ஜொலித்து வந்தார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இப்படி சினிமாவில் கொடிகட்டி பறந்து வந்த இவரது காலகட்டத்தில் இவருக்கு டப் கொடுக்கும் வகையில் ஜொலித்து வந்த மற்றொரு நாயகி தான் நடிகை ஜோதிகா. எக்கச்சக்க படங்களில் ஹீரோயினாக நடித்து வந்த ரம்பாவுக்கு தான் நடிக்கும் படத்தை தயாரிக்க வேண்டும் என்று விருப்பம் ஏற்பட்டுள்ளது. இதனால் தான் திரையுலகில் நடித்து சம்பாதித்த பணத்தை வைத்து ”3ரோஸஸ்” என்ற படத்தை தயாரித்துள்ளார்.
இதில் இவருடன் நடிகை ஜோதிகா மற்றும் நடிகை லைலா இணைந்து நடித்திருந்த ஜோதிகா மற்றும் லைலா இருவருக்கும் இடையில் சில வாக்குவாதங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் இப்படத்தை எடுத்து முடிப்பதற்கு நான்கு வருடங்கள் ஆகியுள்ளது. மேலும் இதன் பிறகு திரைக்கு வந்த இப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய தோல்வியை தழுவிய நிலையில், தான் சம்பாத்தியத்தை முழுவதுமாக இப்படத்தை தயாரிப்பதில் இழந்த ரம்பா கடனாளியாகினார் என கூறப்படுகிறது.