என்னது..,  கர்ணன் பட ரஜிஷா விஜயன் காதலிப்பது இவரைத்தானா?? வைரலாகும் புகைப்படம்!! 

0
என்னது..,  கர்ணன் பட ரஜிஷா விஜயன் காதலிப்பது இவரைத்தானா?? வைரலாகும் புகைப்படம்!! 
மலையாள சின்னத்திரையில் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் தான் ரஜிஷா விஜயன். இதை தொடர்ந்து திரையிலகிற்குள் என்ட்ரி கொடுத்த இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும்  ‘அனுராக கரிக்கின் வெல்லம்’ என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான விருதையும் பெற்றார். இதைத் தொடர்ந்து கர்ணன் படத்தில் நடித்து  தமிழ் சினிமாவிற்குள் அறிமுகமானார்.

இப்படி தமிழ் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பிஸியாக நடித்து வரும் இவர் திரையுலகை சேர்ந்த ஒருவரை காதலிப்பதாக தகவல் பரவி வருகிறது. அதாவது படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வரும் டோபின் தாமஸ் என்பவரை காதலித்து வருகிறாராம். மேலும் ரஜிஷாவின் பிறந்த நாளுக்கு டோபின் பதிவிட்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் ரகசியமாக இருந்த காதலை ரசிகர்களுக்கு வெளிப்படுத்தியுள்ளதை  அடுத்து விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here