பல வருடங்களுக்கு பிறகு தரமான ரீஎன்ட்ரி…, பாரதி கண்ணம்மா 2-வில் கலந்துகொள்ளும் பிரபல நடிகை!!

0
பல வருடங்களுக்கு பிறகு தரமான ரீஎன்ட்ரி..., பாரதி கண்ணம்மா 2-வில் கலந்துகொள்ளும் பிரபல நடிகை!!
பல வருடங்களுக்கு பிறகு தரமான ரீஎன்ட்ரி..., பாரதி கண்ணம்மா 2-வில் கலந்துகொள்ளும் பிரபல நடிகை!!

விஜய் டிவியில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று 1000க்கும் மேற்பட்ட எபிசோட்களை தாண்டி ஒளிபரப்பாகி வந்த சீரியல் தான் பாரதி கண்ணம்மா. இந்நிலையில் இந்த சீரியலில் தனது இறுதி அத்தியாயத்தை எட்டி முடிவுக்கு வந்துள்ளது. மேலும் இன்று இந்த சீரியலின் பாகம் 2 விஜய் திரையில் ஒளிபரப்ப உள்ளது. இந்நிலையில் இந்த சீரியலில் ப்ரோமோ கடந்த வாரம் திரையில் வெளியிடப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இதை வைத்து பார்க்கும் போது இந்த சீரியல் நாம் எதிர்பார்த்தது போல் பாரதி கண்ணம்மா சீரியலின் பாகம் ஒன்றின் தொடர்ச்சியாக இது இருக்காது என தெரிய வருகிறது. அதாவது இந்த சீரியல் கதைக்களம் ஒரு கிராமத்தில் வாழும் குடும்பத்தை மையமாக வைத்து,காதல் நாடகமாக அமைந்துள்ளது. இதில் நடிகை ரூபா ஸ்ரீ அவர்கள் ஹீரோ பாரதிக்கு அம்மாவாக மீண்டும் தனது நடிப்பை தொடர்கிறார். மேலும் இந்த சீரியலில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ராதா நடிக்க உள்ளார்.

விஜய்-அஜித் படத்தில் எப்போது நடிப்பீர்கள்? பதில் சொல்லாமல் தவிர்த்த பிரபல நடிகை!!

இவர் 2002 ஆம் ஆண்டு விமர்சனம் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற ”சுந்தரம் டிராவல்ஸ்” என்ற திரைப்படத்தில் நடிகர் முரளி மற்றும் வடிவேலுவுடன் இணைந்து நடித்திருந்தார். இதன்பிறகு 2012 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ”பைரவி ஆவிகளுக்கு பிரியமானவள்” என்ற நெடுந்தொடரில் நாயகியாக நடித்திருந்தார். இந்நிலையில் இவர் தனது சினிமா வாழ்க்கையில் பத்து ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பாரதி கண்ணம்மா பாகம் 2 ல் தனது நடிப்பை தொடர உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here