விமானத்தில் பறந்தபடி ரீல்ஸ் செய்த நாம் இருவர் நமக்கு இருவர் நாயகி…!வெளியான டிராவல் வீடியோ!!!

0

சீரியலில் தன்னுடைய மிகவும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி புகழ் பெற்றவர் நடிகை ரச்சிதா மஹாலக்ஷ்மி. தற்போது அவர்  விமானத்தில் உயர பறந்தபடி பூமி மற்றும் வானத்தின் அழகை ரீல்ஸ் வீடியோவாக பதிவு செய்து அதை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில்  வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோ தற்போது அனைவரையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற  சீரியல் மூலம் அறிமுகமானவர் நடிகை ரச்சிதா மஹாலக்ஷ்மி.  அதை தொடர்ந்து இளசுகளின் ஆர்வத்தை தூண்டி, காதல் காவியமாக வெளி வந்த  சீரியல் சரவணன் மீனாட்சி. அந்த சீரியல் ரொமான்ஸ், குடும்ப பாங்கு  என நடிப்பில் தன்னுடைய  பல்வேறு வித பாவனைகளை வெளிப்படுத்தி இருப்பார். மேலும் இவரின் இந்த சீரியல் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது. அதன் பிறகு பல சீரியல்களில் நடித்து உள்ளார்.

மேலும் ஜீ தமிழ் டிவியில் நாச்சியார் புறம் என்ற சீரியலில் ரசித்தா மற்றும் அவரது கணவரும் இணைந்து நடித்தனர். தற்போது அவர் விஜய் டிவியில் மிக விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் மகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில்  அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் விமானத்தில் பறந்த படி பூமி மற்றும் வானத்தின் அழகை ரசித்து கொண்டு ‘பெரிய பெரிய காடு தாண்டி…’ என தொடங்கும் மாறா பட பாடலை  பின்ணனி இசையாக  ஒலிக்க   ரீல்ஸ் செய்து அந்த வீடியோவை   வெளியிட்டு உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here