நயன்தாராவுக்கு முன்பே அந்த விஷயத்தை செஞ்ச பிரியங்கா சோப்ரா.., அதற்கு இதான் காரணமாம்!!

0
நயன்தாராவுக்கு முன்பே அந்த விஷயத்தை செஞ்ச பிரியங்கா சோப்ரா.., அதற்கு இதான் காரணமாம்!!
நயன்தாராவுக்கு முன்பே அந்த விஷயத்தை செஞ்ச பிரியங்கா சோப்ரா.., அதற்கு இதான் காரணமாம்!!

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றதன் காரணம் குறித்து தற்போது பேசியுள்ளார்.

பிரியங்கா சோப்ரா:

பாலிவுட் சினிமா துறையில் பல ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நட்சத்திரமாக கொடிகட்டி பறந்து வருபவர் தான் நடிகை பிரியங்கா சோப்ரா. தமிழில் தளபதி விஜய் நடித்த தமிழன் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். அப்படம் சரியாக போகாத காரணத்தால் பாலிவுட் பக்கம் ஒதுங்கினார். அங்கு சென்ற நேரத்தில் பல பட வாய்ப்புகள் கிடைத்து முன்னணி நட்சத்திரமாக உயர்ந்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இப்படி பிசியாக நடித்து வந்த பிரியங்கா சோப்ரா கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க பாடகரான நிக் ஜோனஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு ஜனவரி மாதம் வாடகை தாய் மூலம் அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தார். அப்போது இவருக்கு எதிராக பல கண்டனம் எழுந்து வந்தது. அதுமட்டுமின்றி ஏன் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றெடுத்தீர்கள் என்ற கேள்விக்கு பதில் அளிக்காமல் இருந்து வந்தார் பிரியங்கா சோப்ரா.

இந்நிலையில் குழந்தை பிறந்து ஒரு வருடங்கள் ஆனதற்கு பின்னர், முதல் முறையாக வாடகை தாய் முறையை தேர்வு செய்ததன் காரணம் என்பது குறித்து பிரியங்கா சோப்ரா கூறியுள்ளார். அவர் கூறியதாவது, எனக்கு மருத்துவ ரீதியாக பல பிரச்சனைகள் இருக்கிறது. என்னால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத காரணத்தால் தான் வாடகை தாய் முறையை தேர்ந்தெடுத்தேன் என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here