விருப்பமே இல்ல., வற்புறுத்தி இப்படி பண்ண வச்சுட்டாங்க – நடிகை பிரியாமணி பகிரங்க புகார்!!

0
விருப்பமே இல்ல., வற்புறுத்தி இப்படி பண்ண வச்சுட்டாங்க - நடிகை பிரியாமணி பகிரங்க புகார்!!

பிரபல தயாரிப்பாளர் ஒருவர் பிடிக்காத வேலையை செய்ய சொல்லி வற்புறுத்தியதாக நடிகை பிரியாமணி இணையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை தெரிவித்துள்ளார்.

நடிகை பிரியாமணி:

இயக்குனர் பாரதிராஜாவின் ‘கண்களால் கைது செய்’ என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக கால் பதித்தவர் தான் நடிகை பிரியாமணி. இதை தொடர்ந்து பாலுமகேந்திரா, மணிரத்னம் ஆகிய பெரிய டைரக்டர்களின் படங்களில் நடித்து பிரபலமானார். குறிப்பாக அமீர் இயக்கிய ‘பருத்தி வீரன்’ படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இவர் தமிழ் படங்கள் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் பெயர் எடுத்தவர். அதன் பின்னர் முஸ்தபா ராஜ் என்ற தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்டார். தற்போது 4 படங்கள் கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் பிரபல தயாரிப்பாளர் ஒருவர் பிடிக்காத வேலையை செய்ய சொல்லி வற்புறுத்தியதாக நடிகை பிரியாமணி புகார் தெரிவித்துள்ளதாக இணைய தளங்களில் தகவல் பரவி உள்ளது.

விவாகரத்து ஆனாலும் ஆச்சு ரக்ஷிதா ஆட்டம் கொஞ்சம் ஓவர் தான்பா.., அவரே வெளியிட்ட பதிவு!!

அதாவது நான் நடித்த ஒரு திரைப்படம் பாதியில் நின்ற நிலையில் தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவர் என்னை அணுகி தொப்புள் பக்கத்தில் பச்சை குத்திக் கொள்ள வேண்டும் என்று தொல்லை செய்தார். எனக்கு இதில் முற்றிலும் விருப்பம் இல்லை. ஆனால் வேறு வழியில்லாமல் அவரது நிபந்தனையை ஏற்று கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here