நடிகை பிரியா பவானி சங்கர் தனது காதலன் குறித்த, பல முக்கியமான தகவல்களை ஒரு பேட்டியில் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
நடிகை விளக்கம்:
சின்னத்திரை உலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்த பிரியா பவானி சங்கர், வெள்ளி திரையில் தனக்கு கிடைத்த அடுத்தடுத்த வாய்ப்புகளால் தவிர்க்க முடியாத நடிகையாக உயர்ந்தார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் பெரிய அளவில் பேசப்பட்டது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதுபோக, நடிகர் ஹரிஷ் கல்யாணுடன் இவர் சேர்ந்து நடித்த ஓ காதல் கண்மணி படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருந்தது. இந்த படத்தில் இருவரும் காதலித்ததாக, கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் உண்மையில் நடிகை பிரியா பவானி சங்கர் தனது கல்லூரி பருவத்தில் இருந்து ஒரு நபரை காதலித்து வந்தார்.
வைகைப்புயல் வடிவேலு தாயார் அதிர்ச்சி மறைவு., சோகத்தில் மூழ்கிய குடும்பம்! ரசிகர்கள் கண்ணீர்!!
தற்போது அவர் குறித்த முக்கியமான தகவல்களை ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். அதாவது தன் காதலித்த அந்த நபர், தன் அப்பாவுக்கு இணையாக தன் மீது பாசம் காட்டக் கூடியவர் என்றும், கிட்டத்தட்ட பல ஆண்டுகளாக அவருடன் பழகி வருகிறேன் என்றும் தெரிவித்தார். எங்களுக்குள் நிறைய புரிதல் இருக்கிறது என்றும், அவரிடம் அளவிட முடியாத அன்பை நான் பெற்றுள்ளேன் எனவும் உருக்கமாக பேசியுள்ளார். இவரின் இந்த பேட்டி தற்போது பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.