அது ஒன்னுக்காக தான் நடிக்க வந்தேன்.., உண்மையை உடைத்த பிரியா பவானி சங்கர்!!!

0
அது ஒன்னுக்காக தான் நடிக்க வந்தேன்.., உண்மையை உடைத்த பிரியா பவானி சங்கர்!!!
அது ஒன்னுக்காக தான் நடிக்க வந்தேன்.., உண்மையை உடைத்த பிரியா பவானி சங்கர்!!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் தான் பிரியா பவானி சங்கர். இவர் சினிமா துறைக்கு வருவதற்கு முன்பாக தொலைக்காட்சிகளில் சின்னத்திரை சீரியல்களில் நடித்தும், தொகுப்பாளராகவும் பணிபுரிந்து மக்கள் மத்தியில் பிரபலமானார். அந்தவகையில் பிரியா பவானி சங்கர் கல்யாணம் முதல் காதல் வரை என்னும் தொடரில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி ரீச் ஆனார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மேலும் அத்தகைய சீரியல் மூலம் மக்கள் மற்றும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த பிரியா பவானி சங்கர் தற்போது சினிமாவில் ஒரு கலக்கு கலக்கி வருகிறார். அந்த வகையில் இப்பொழுது பத்து தல, அகிலன், இந்தியன் 2, டிமாண்டி காலனி 2 போன்ற படங்களை தனது கை வசம் வைத்துள்ளார். இந்நிலையில் சினிமாவுக்குள் வந்ததன் காரணம் குறித்து சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

சினிமாவில் சூப்பர் ஸ்டார்னா நாட்டை ஆளும் தகுதி வந்துவிடுமா?.., நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசம்!!

அவர், நான் சீரியலில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்த போது, எனக்கு பெரிய நடிகையாக வேண்டும் என்ற எந்த எண்ணமும் இல்லை. சொல்லப்போனால் ரசிகர்கள் என்னை ஏற்றுக்கொள்வார்களா?? இல்லையா?? என்று நான் சிந்தித்தது கூட இல்லை. நான் தமிழில் நடிக்க காரணம், நடித்தால் பணம் கிடைக்கும் அதனால தான் நடிக்க வந்தேன் என்று கூறியுள்ளார். அவர் கூறியதை கேட்ட நெட்டிசன்கள் இது தான் காரணமா என்று சிலர் அவரை கலாய்த்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here