அந்த பட ஷூட்டிங்கின் போது அது நடந்துச்சு., அதோடு தான் படம் நடித்தேன்., நடிகை பூர்ணிமா பகீர் பேட்டி!!

0
அந்த பட ஷூட்டிங்கின் போது அது நடந்துச்சு., அதோடு தான் படம் நடித்தேன்., நடிகை பூர்ணிமா பகீர் பேட்டி!!
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தான் நடிகை பூர்ணா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களில் நடித்து அசத்தியுள்ளார். இதுபோக சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக இருந்து வந்துள்ளார். இப்படி தனது கெரியரில் பிசியாக இருந்து வரும் இவர் தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். மேலும் இந்த தம்பதிகளுக்கு சில மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் இவர் நடித்த ‘டெவில்’ திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. இதை முன்னிட்டு டெவில் பட நடிகர்கள் தனியார் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்தனர்.
அதில் டெவில் பட அனுபவம் குறித்து பல சுவாரசியமான விஷயங்களை பூர்ணிமா பகிர்ந்தார். அதாவது டெவில் படத்தில் நடித்து கொண்டிருந்த போது தான் இவர்  கர்ப்பமான விஷயம் இவருக்கு தெரிய வந்ததாம். மேலும் கர்ப்பமானதோடு தான் இப்படத்தின் ஷூட்டிங்கில்  தான்  பங்கேற்றதாக தெரிவித்துள்ளார்.  இவ்வாறு வயிற்றில் குழந்தையுடன் படம் நடித்து முடித்த பூர்ணிமாவுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here