பெரும்பாலும் கோலிவுட் திரையில் நடிக்கும் பல நடிகைகளில் மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி சினிமாவில் இருந்து வந்தவர்களாக தான் இருப்பார்கள். ஆரம்பத்தில் தமிழ் தெரியாத நடிகைகள் பின்னர் எக்கசக்க படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் தங்களின் நடிப்பினால் குடியேறிவிடுவார்கள்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அப்படி தெலுங்கு திரையில் அறிமுகமாகி அதன் பின்னர் தமிழ் படங்களில் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தவர் தான் பூனம் பஜ்வா. இவரின் கியூட்டான நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்க தொடங்கியது. மேலும் பல இளைஞர்களின் நெஞ்சில் கனவு நாயகியாக உருவெடுத்தார்.
இவ்வாறு தென்னிந்திய திரையில் பிஸியாக நடித்து வந்த இவருக்கு ஒரு கட்டத்தில் பட வாய்ப்பு குறைய தொடங்கியது. இதன் பிறகு சினிமாவை விட்டு தூரம் சென்ற இவர் சோசியல் மீடியாவில் தன் ரசிகர்களுடன் நெருக்கமாக தொடங்கினார். அதாவது தன்னை பற்றிய அப்டேட்களை ஷேர் செய்ய தொடங்கினார். அந்தவகையில் தற்போது கூட தனது நியூ போட்டோ சூட் பிக்குகள் சிலவற்றை இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ளார்.