பிரபல நடிகருடன் எனக்கு திருமணமா? – வதந்தி பரப்பியவர்களை கிழித்து தொங்கவிட்ட முன்னணி நடிகை!

0
திருமணமாகி ஒரு வருடத்தில் ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன சீரியல் நடிகை.., வைரலாகும் புகைப்படம்!!
திருமணமாகி ஒரு வருடத்தில் ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன சீரியல் நடிகை.., வைரலாகும் புகைப்படம்!!

நடிகை நித்யா மேனன் பிரபல மலையாள நடிகரை காதலிப்பதாகவும், அவரை விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் தகவல் வெளியானது. இதுபற்றி நித்யா மேனன் தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

நடிகை நித்யா மேனன்:

நடிகை நித்யா மேனன் பிரபல தென்னிந்திய நடிகையாக வலம் வருகிறார். இவர் நடித்த தமிழ் படங்களான ஓ காதல் ஓ கண்மணி, மெர்சல் போன்ற படங்கள் வசூல் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. இவர் இன்று வரை திருமணம் செய்து கொள்ளாமல் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் விரைவில் வெளியாக இருக்கும் தனுஷ் படமான திருச்சிற்றம்பலம் படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை நித்யா மேனன் பிரபல மலையாள நடிகரை காதலிப்பதாகவும், அவரை விரைவில் திருமணம் செய்து கொள்ள போவதாகவும் சில தகவல்கள் ஊடகங்களில் வெளியானது.

இதுகுறித்து தற்போது பேசியுள்ள நடிகை நித்யா மேனன் ஊடகங்களில் வரும் தகவல்கள் அனைத்தும் பொய்யானவை. நான் யாரையும் காதலிக்கவில்லை மேலும் தற்போது திருமணம் செய்ய போவதில்லை. இப்போது நல்ல படங்கள் என்னை தேடி வருகிறது. அதில் நான் ஆர்வம் காட்டி வருகிறேன் என்று கூறியுள்ளார். மேலும் இது போல பொய்யான தகவலை பரப்ப வேண்டாம் என்றும் உண்மை நிலையை அறிந்து செயல்படுங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here