போதும்டா சாமி .., இதோட முடிச்சுக்கலாம்.., விக்கியிடம் விவாகரத்து கேட்ட நயன்தாரா?.., ரசிகர்கள் ஷாக்!!

0

நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் விவாகரத்து பெற்று பிரிய இருப்பதாக சோசியல் மீடியாவில் ஒரு தகவல் தீயாய் பரவி வருகிறது.

நயன்-விக்கி:

தமிழ் சினிமாவில் கடந்த ட்ரெண்டிங் காதல் ஜோடியாக வலம் வந்து கொண்டிருந்தவர்கள் தான் நயன்-விக்கி. இவர்கள் இருவரும் சேர்ந்து நானும் ரவுடிதான் என்ற படத்தில் ஒன்றாக பணிபுரிந்த போது இருவருக்கும் காதல் மலரத் தொடங்கியது. கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சென்னை மகாபலிபுரத்தில் மிக பிரமாண்டமாக திருமணத்தை நடத்தி முடித்தனர். கல்யாணம் முடிந்த கையோடு வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தனர். இவர்களின் இந்த இரட்டை குழந்தை விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

பின்னர் ஒருவழியாக அந்த சர்ச்சையில் இருந்து மீண்டனர். இதனை தொடர்ந்து அஜித்தை வைத்து ஏகே 62 படத்தை விக்கி இயக்க இருந்த நிலையில் அதுவும் அவரது கையை விட்டு நழுவிச் சென்றது. இதனால் நயன் அப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் அஜித்திடம் எவ்வளவோ பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த பயனும் இல்லாமல் போனது. இந்த நிலையில் நயனும் விக்கியும் பிரிந்து செல்ல முடிவெடுத்து இருப்பதாக ஒரு தகவல் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

அதாவது, திருமணத்திற்கு பிறகு நயனோட சினிமா வாழ்க்கையில எந்த படமும் சரியாக ஓடவில்லை. அதுமட்டுமின்றி கையில் இருந்த இரண்டு திரைப்படங்களும் கை நழுவிச் சென்றது. இதனால் அவர்கள் பிரிய போவதாக சொல்லப்படுகிறது. ஆனால் இது குறித்த எந்த ஒரு அறிவிப்பும் இருவரிடம் இருந்து வெளிவரவில்லை. இவர்களுக்கு திருமணமான ஒரு மாதத்தில் இருவரும் பிரிந்து சென்றனர் என்று ஒரு வதந்தி பரவியது குறிப்பிடத்தக்கது. எனவே இதுவும் வதந்தியாக தான் இருக்கும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here