முழுக்கவனத்தையும் பிஸ்னஸில் செலுத்தும் லேடி சூப்பர் ஸ்டார் – இணையத்தில் வைரலாகும் தகவல்!!

0

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா. தற்போது இவர் எண்ணெய் தொழில் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடிகை நயன்தாரா:

தமிழ் சினிமாவில் நடிகர் சரத் குமார் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த ஐயா திரைப்படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்த அறிமுகம் ஆனவர் நடிகை நயன்தாரா. இவர் நடித்த முதல் படமே இவருக்கு வெற்றி படமாக அமைந்தது. அதை ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த்யின் நடிப்பில் வெளிவந்த சந்திரமுகி படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்து இருந்தார்.

அதன் பிறகு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் அனைவருடனும் நடித்து விட்டார். இவரின் நடிப்பு திறமையை பாராட்டி தமிழ் ரசிகர்கள் இவரை லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைப்பர். தற்போது இவர் லயன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகர் ஷாருக்கான் இவருடன் ஜோடி சேர்ந்து நடிக்க உள்ளார். தற்போது உள்ள கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு தள்ளி போய் விட்டது.

இந்நிலையில் நயன்தாரா தனது குடும்பத்துடன் இந்த நேரத்தை செலவிட்டு வருகிறார். மேலும் நயன்தாரா தற்போது முழுவதுமாக பிசினஸ் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே நடிகை நயன்தாராவிற்கு சென்னையில் 50 டீ கடைகள் உள்ள நிலையில் அடுத்ததாக 100 கோடிக்கு எண்ணெய் தொழில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் நடிகை நயன்தாரா இன்னும் ஒரு சில வருடத்தில் நடிப்பில் இருந்து விலகி முழுவதுமாக பிசினஸ் செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here