தங்க நிற புடவையில் தகதகவென மின்னும் அட்டகத்தி நந்திதா…!குமுதா ஹேப்பி அண்ணாச்சி!!!

0

கன்னட திரை மூலம் திரை உலகிற்கு வந்தவர் நடிகை நந்திதா அவர்கள். அவ்வப்போது தன்னுடைய போட்டோக்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்து வந்தார். அந்த வகையில் தகதகவென மின்னும் தங்க நிற புடவையில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். தற்போது அவரின் இந்த புகைப்படம் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்து வருகிறது.

 தமிழ் திரையுலகில் தினேஷ் அவர்களுக்கு  ஜோடியாக அட்டகத்தி படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு இவர் பல படங்களில் நடித்துள்ளார். நந்திதா மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற படம் பட்டிதொட்டி எங்கும் பரிச்சயமானது. இதில் வரும் குமுதா  ஹேப்பி  அண்ணாச்சி வசனம் அனைவர் மத்தியிலும் பிரபலமானது. மேலும் இவர் தமிழ் மற்றும் கன்னட மொழிகளை தவிர்த்து தெலுங்கிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

மேலும் நந்திதா நடித்த படங்களில்  இவரின் கதாபாத்திரம் அனைவரையும் கவரும் வகையில் அமையும். தற்போது  அவர் சன் டிவியின் அபியும் நானும் என்ற ஒரு சீரியல் நுழைய உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் நந்திதா அவர்கள் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு உள்ள ஒரு புகைப்படத்தில் தகதகவென ஜொலிக்கும் தங்க நிற புடவையில் அழகு தேவதையாக உள்ளார். தற்போது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here