தனது இரட்டை குழந்தைகள் புகைப்படத்தை வெளியிட்ட நமீதா.., லைக்ஸ்களை குவித்த ரசிகர்கள்!!

0
தனது இரட்டை குழந்தைகள் புகைப்படத்தை வெளியிட்ட நமீதா.., லைக்ஸ்களை குவித்த ரசிகர்கள்!!
தனது இரட்டை குழந்தைகள் புகைப்படத்தை வெளியிட்ட நமீதா.., லைக்ஸ்களை குவித்த ரசிகர்கள்!!

பிரபல நடிகையான நமீதா தற்போது தனது குழந்தைகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.

நமீதா

தென்னிந்திய திரையுலகில் பல ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நமீதா. இவரது ஸ்லாங்கான ‘ஹாய் மச்சான்’ தான் இவரை அதிகளவு பேமஸாக்கியது. மேலும் கதாநாயகியாக மட்டுமில்லாமல் முன்னணி நடிகர்கள் படங்களில் ஐட்டம் டான்ஸ் மட்டும் ஆடி வந்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

சிலா காலம் சினிமாவிற்கு பிரேக் விட்டிருந்த நமீதா பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரீஎன்ட்ரி கொடுத்தார். அவரது செய்கைகள் பலவும் பலரையும் முகம் சுளிக்க வைத்தது. ஓவியாவை அவர் பேசிய பேச்செல்லாம் கொஞ்ச நஞ்சம் கிடையாது. இதனால் ரசிகர்களின் வெறுப்புக்கு ஆளானார். வீட்டை விட்டு வெளியேறிய அவர் தயாரிப்பாளரும், நடிகருமான வீரேந்திர சவுத்ரியை திருமணம் செய்து கொண்டார்.

அதன் பிறகு இவர்களுக்கு அழகான இரட்டை ஆண் குழந்தை பிறந்தது. இதுவரை குழந்தைகளை காட்டாத நமீதா முகத்தை மட்டும் மறைத்தபடி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். எப்படியும் குழந்தை உங்கள மாதிரி தான் இருக்கும், கூடிய சீக்கிரம் குழந்தைகளை காட்டுங்க என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here