
பிரபல முன்னாள் நடிகை நக்மாவின் வங்கி கணக்கில் இருந்து பணம் திருடு போன சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை நக்மா:
தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக ஜொலித்தவர் தான் நடிகை நக்மா. ரஜினியுடன் பாட்ஷா, கார்த்தியுடன் மேட்டுக்குடி, பிரபு தேவாவுடன் காதலன் போன்ற பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். 48 வயதாகியும் தற்போது வரை திருமணம் செய்து கொள்ளல் சிங்கிளாக வாழ்ந்து வரும் இவர்,இப்பொழுது நடிப்பை விட்டு விலகி ஒரு அரசியல் முழுமூச்சாக இருந்து வருகிறார். இந்த நிலையில் நடிகை நக்மாவிடம் ஒருவர் போனில் பேசி, அவரது வங்கி அக்கவுண்டில் இருந்து கிட்டத்தட்ட ரூ.1 லட்சம் திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அதாவது, நக்மா மொபைலுக்கு உங்களுடைய வங்கி அக்கவுண்டை KYC விவரங்களை அப்டேட் செய்ய வேண்டும் என்றால் இந்த லிங்கை கிளிக் செய்யுமாறு ஒரு மெசேஜ் வந்துள்ளது. நக்மாவும் எதையும் யோசிக்காமல் லிங்கை கிளிக் செய்துள்ளார். உடனே நக்மாவுக்கு ஒரு போன் கால் வந்துள்ளது. அதில் பேசிய மர்ம நபர், தான் ஒரு வங்கி அதிகாரி என்றும், தான் KYC விவரங்களை அப்டேட் செய்ய உதவுவதாகவும் பேசியுள்ளார். இப்படி தொடர்ந்து நக்மாவிடம் பேசிய அந்த நபர், நக்மா அக்கவுண்டில் இருந்த 99,998 ரூபாய் வேறொரு அக்கவுண்டுக்கு மாற்றியுள்ளார்.
இதுகுறித்து அவர் பேசியதாவது, அந்த மர்ம நபர் என்னுடைய மொபைலுக்கு 20க்கும் மேற்பட்ட OTP களை அனுப்பி அதன் மூலம் பெரும் தொகையை திருட முயன்றார் , ஆனால் நான் எந்த விவரங்களையும் பகிராததால் அதிகளவில் பணத்தை இழக்கவில்லை என்று கூறி காவல் துறையிடம் புகார் அளித்துள்ளார். மேலும் இது மாதிரி கிட்டத்தட்ட 80 பேர்களிடம் பணத்தை அபேஸ் செய்திருக்கிறார்கள் எனவும், அதில் ஒருவர் நக்மா எனவும் சொல்லப்படுகிறது.