சிவகார்த்திகேயனுக்கு அடுத்து ஜோடியாகும் சூப்பர் ஹிட் நடிகை.., வெளிவந்த புது அப்டேட்!!

0

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான தர்பார் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனம் பெற்று படுதோல்வி அடைந்தது. கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக எந்த படத்தையும் இயக்காமல் இருந்து வந்து இவர் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து படத்தை எடுக்க இருக்கிறார். சிவா தற்போது கமல் தயாரிப்பில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இப்படத்திற்கு பிறகு தான் சிவா முருகதாஸுடன் கூட்டணி அமைக்க இருக்கிறார். இந்நிலையில் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க இருக்கும் ஹீரோயின் குறித்து இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக மிருணாள் தாக்கூர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here