மீண்டும் சர்ச்சையில் சிக்கிய நடிகை மீரா மிதுன்.., வலை வீசி தேடி வரும் போலீஸ்!!

0
மீண்டும் சர்ச்சையில் சிக்கிய நடிகை மீரா மிதுன்.., வலை வீசி தேடி வரும் போலீஸ்!!
மீண்டும் சர்ச்சையில் சிக்கிய நடிகை மீரா மிதுன்.., வலை வீசி தேடி வரும் போலீஸ்!!

பிக்பாஸ் பிரபலம் மீரா மிதுன் தாழ்த்தப்பட்டோர் குறித்து அவதூறாக பேசியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் புகாரளிக்கப்பட்டதை தொடர்ந்து போலீஸ் வலை வீசி தேடி வருகிறது.

நடிகை மீரா மிதுன்:

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியவர் தான் நடிகை மீரா மிதுன். அதுமட்டுமின்றி தளபதி விஜய், அவருடைய மனைவி மற்றும் நடிகர் சூர்யா, அவருடைய மனைவி ஆகியோரை இழிவாக பேசி தொடர்ந்து சர்ச்சையில் சிக்கினார். இதனால் அவருடைய ரசிகர்கள் மீரா மிதுனை வெளுத்து வாங்கி வந்தனர்.

இந்நிலையில் தாழ்த்தப்பட்டோர் குறித்து தவறான கருத்துக்களை கூறியதால் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை வழக்கு பதிவு செய்து மீரா மற்றும் அவரது நண்பர் ஷாம் அபிஷேக்கையும் கைது செய்தனர். அதன் பின்னர் ஜாமீனில் இருவரும் வெளிவந்த நிலையில், இந்த வழக்கு விசாரணை சென்னையில் முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில் நடைபெற்றது.

மேலும் விசாரணைக்கு வராமல் நடிகை மீரா மிதுன் தலைமறைவாகிவிட்டார். இதனால் கோர்ட் பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்த நிலையில் நேற்று இந்த விசாரணை தொடர்ந்தது. இந்நிலையில் கோர்ட்டில் வாதாடிய போலீஸ் தரப்பு வக்கீல், நடிகை மீரா மிதுன் பெங்களூருவில் தலைமறைவாக உள்ளார், விரைவில் பிடித்து ஆஜர் படுத்துகிறோம் என்று வாதாடினார். இதனை கருத்தில் கொண்டு இந்த வழக்கை வருகிற செப் 28-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here