நடிகை மீனாவின் கணவர் இறப்பிற்கு கொரோனா மட்டும் காரணம் அல்ல – கசிந்த அதிர்ச்சி தகவல்!

0
நடிகை மீனாவின் கணவர் இறப்பிற்கு கொரோனா மட்டும் காரணம் அல்ல - கசிந்த அதிர்ச்சி தகவல்!

தமிழ் சினிமாவில் ஒரு குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகி 90ஸ் காலத்தில் தவிர்க்க முடியாத ஒரு ஹீரோயின் ஆக வலம் வந்தவர் நடிகை மீனா. தற்போது இவர் துணை நடிகையாக நடித்து வருகிறார். இறுதியாக தமிழில் இவர் அண்ணாத்த படத்தில் நடித்து இருப்பார். இந்நிலையில் பெங்களுருவில் வசித்து வந்த மீனாவின் கணவர் வித்யாசாகர் உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார்.

வித்யாசாகர் கொரோனா மற்றும் நுரையீரல் தொடர்பான பிரச்னைக்காக சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வநதார். சிகிச்சை பலனளிக்காமல் நாளுக்கு நாள் உடல்நிலை மோசமடைந்து மரணமடைந்துள்ளார். தற்போது இவர் இறப்பு குறித்து மற்றொரு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

புஷ்பா 2 படத்தில் களம் இறங்கும் மாஸ் ஹீரோ – படக்குழு போட்ட மாஸ்டர் பிளான்!!

அதாவது வித்யாசாகர் ஏற்கெனவே நுரையீரல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த பிரச்சனை அவருக்கு புறாக்களின் எச்சம் கலந்த காற்றைச் சுவாசிக்கும் பொழுது உண்டாகியுள்ளது. பெங்களூவில் அவருடைய வீட்டுக்கு அருகில் அதிக புறாக்கள் வளர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதனால் அலர்ஜி ஏற்பட்டு அவருக்கு சுவாசப் பிரச்னை வந்துள்ளது. அதோடு கொரோனா தொற்றும் இணைந்துகொள்ள அவரை மரணப்படுக்கையில் தள்ளியதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here