வாயை கொடுத்து வசமாக சிக்கிய துணிவு பட நடிகை.., ஐய்யோ கடைசில நீங்களாவே சிக்கிடீங்களே?

0
வாயை கொடுத்து வசமாக சிக்கிய துணிவு பட நடிகை.., ஐய்யோ கடைசில நீங்களாவே சிக்கிடீங்களே?
வாயை கொடுத்து வசமாக சிக்கிய துணிவு பட நடிகை.., ஐய்யோ கடைசில நீங்களாவே சிக்கிடீங்களே?

நடிகை மஞ்சு வாரியர் டிரைவிங் லைசென்ஸ் எடுத்துள்ளதாக இணையத்தில் தகவல் வெளியான நிலையில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

நடிகை மஞ்சு வாரியர்:

மலையாள வட்டாரங்களில் பல வெற்றி படங்களில் நடித்து முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து வருபவர் தான் நடிகை மஞ்சு வாரியர். இவர் வெற்றிமாறன் இயக்கிய அசுரன் திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். தற்போது அஜித் குமார் நடிப்பில் உருவான துணிவு திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் கடந்த ஜனவரி 11ம் தேதி பொங்கல் முன்னிட்டு வெளியான நிலையில் தற்போது வரை கலவையான விமர்சனங்களை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இப்படத்தில் நடிகை மஞ்சு வாரியர் அசத்தலான நடிப்பை வெளிக்காட்டி ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்துள்ளார். இந்த நிலையில் நடிகை மஞ்சுவாரியர் குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது நடிகை மஞ்சு வாரியர் டிரைவிங் லைசென்ஸ் எடுத்துள்ளதாக இணையத்தில் அறிவிப்பை வெளியிட்டார். மேலும் அஜித்தை போல் நானும் பைக் பயணம் மேற்கொள்ள போகிறேன் என்று தெரிவித்தார்.

PS -1க்கு பின் வாரிசு பிரபலத்துக்கு ஜாக்பாட்.., 3 மொழிகளில் ரிலீசாகும் புதிய படம்! லீக்கான தகவல்!!

இந்த அறிவிப்பைக் கேட்ட நெட்டிசன்கள் சில கேள்விகளை எழுப்பி வருகின்றனர். அதாவது துணிவு படத்தின் போது அஜித் இமாலய பகுதியில் இயற்கை பயணம் சென்ற போது, மஞ்சு வாரியரும் சென்றிருந்தார். இப்பதான் டிரைவிங் லைசன்ஸ் எடுக்கிறார் என்றால், அப்போ சென்றது குற்றம் தானே என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here