என் கெரியர் போனதுக்கு காரணமே ரஜிகாந்த் தான்.., குமுறும் மனிஷா கொய்ராலா!!

0
என் கெரியர் போனதுக்கு காரணமே ரஜிகாந்த் தான்.., குமுறும் மனிஷா கொய்ராலா!!
என் கெரியர் போனதுக்கு காரணமே ரஜிகாந்த் தான்.., குமுறும் மனிஷா கொய்ராலா!!

நடிகை மனிஷா கொய்ராலா சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தை குறித்து பேசியது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.

நடிகை மனிஷா கொய்ராலா:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகை மனிஷா கொய்ராலா. இவர் தமிழில் பம்பாய் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி தொடர்ந்து முதல்வன், இந்தியன், ஆளவந்தான் போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்து புகழின் உச்சிக்கு சென்றார். அதன் பின்னர் பாபா என்ற படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இப்படம் அந்த சமயத்தில் சரியாக போகாமல் படுதோல்வி அடைந்தது. இந்த நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தை குறித்து பேசியுள்ளார். அதாவது அவர் பேசியதாவது, நான் சினிமாவில் மார்க்கெட்டை இழந்ததுக்கு முக்கிய காரணம் ரஜினியின் பாபா திரைப்படம் தான். இந்த படத்தால் தமிழில் மட்டுமின்றி இந்தியிலும் வாய்ப்பு குறைந்தது.

அட என்ன லுக்குடா இது.., மிச்சம் வைக்காமல் கிளாமரை அள்ளித் தெளித்த காஜல்.., சொக்கி நின்ற இளசுகள்!!!

இதை தொடர்ந்து மற்ற மொழிகளிலும் மார்க்கெட் குறைந்து படவாய்ப்புகள் வராமல் போனது. இப்படி சினிமா கேரியரில் இவ்வளவு பெரிய சறுக்கலுக்கு ரஜினியும் காரணம். மேலும் சினிமால நான் நடுத்தெருவுக்கு வந்ததுக்கு காரணம் ரஜினிகாந்த் தான் என்று கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இவர் கடைசியாக தனுஷ் நடித்த மாப்பிள்ளை படத்தில் ஹீரோயினுக்கு அம்மாவாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here