காதலுக்கு அந்த விஷயம் மட்டும் கிடையாதுங்க.., ரசிகர் கேட்ட கேள்விக்கு கூலா பதிலளித்த மாளவிகா மோகனன்!!

0
காதலுக்கு அந்த விஷயம் மட்டும் கிடையாதுங்க.., ரசிகர் கேட்ட கேள்விக்கு கூலா பதிலளித்த மாளவிகா மோகனன்!!
காதலுக்கு அந்த விஷயம் மட்டும் கிடையாதுங்க.., ரசிகர் கேட்ட கேள்விக்கு கூலா பதிலளித்த மாளவிகா மோகனன்!!

மலையாள திரையுலகில் அறிமுகமாகி, தற்போது முன்னணி நட்சத்திரமாக கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகை மாளவிகா மோகனன். இவர் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில் காலடி எடுத்து வைத்தார். அதன் பின்னர் மாஸ்டர், மாறன் போன்ற படங்களில் நடித்தார். இதில் மாஸ்டர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் என்ற படத்தில் சியான் விக்ரமுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதுமட்டுமின்றி மலையாள படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தில் மாளவிகா மோகன் தனது வயதை விட குறைவான வயதுடைய நபரை காதலிப்பது போல் கதையம்சம் அமைந்திருப்பதாக கூறப்படுகிறது.

ஜெ.., இந்திரா காந்தியை தொடர்ந்து நடிகை ஜமுனா பயோபிக் உருவாகிறது?.., ஹீரோயினாக நடிக்க போகும் முக்கிய பிரபலம்!!

இப்படி சினிமாவில் பிசியாக இருந்து வந்தாலும் தொடர்ந்து சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார் மாளவிகா மோகனன். அந்த வகையில் சமீபத்தில் ரசிகர்களிடம் சமூக வலைத்தளங்களில் கலந்துரையாடி கொண்டிருக்கும் பொழுது ஒரு ரசிகர் ஒரு கேள்வியை எழுப்பியுள்ளார்.

அதாவது ஒரு பெண் அவரை விட மிக குறைவான வயதுடைய ஒரு ஆண் நபரை காதலிப்பதை குறித்து உங்கள் கருத்து என்ன? என்று கேள்வி கேட்டார். அதற்கு, காதல் என்றால் அது அன்பு தான். அது யாருக்குனாலும், யாருமேலனாலும் வரும். காதல் எப்போதும் வயதை பார்த்து வராது. மனச பார்த்து தான் வரும். அதனால காதலுக்கு எப்போதும் வயது கிடையாது என்று நெத்தியடி பதில் ஒன்றை கொடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here