மைனாவின் கணவர் எம்.ஜி.ஆர் பட வில்லனின் பேரனா?? இத்தனை நாள் இது தெரியாம போச்சே!!

0

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “சரவணன் மீனாட்சி” சீரியலில் ‘மைனா’ என்ற கதாபாத்திரம் மூலமாக பிரபலம் அடைந்த நந்தினியின் கணவர் யோகேஷ் பழம்பெரும் நடிகரின் பேரன் என்ற செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை ‘மைனா’ நந்தினி

விஜய் டிவியில் பல சீரியல்கள் வெற்றிகரமாக ஓடினாலும், ஒரு காலத்தில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பான சீரியல் தான், “சரவணன் மீனாட்சி”. இந்த சீரியலில் நடித்த பலரும் இன்று தங்களுக்கு என்று ஒரு தனி அடையாளத்தினை உருவாக்கி கொண்டனர். அந்த வகையில் அந்த சீரியலில் “மைனா” என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நந்தினி.

உச்சகட்ட கவர்ச்சியில் போஸ் கொடுத்த விஜய் டிவி நடிகை – இந்த வயசுல இதெல்லாம் தேவையா? கலாய்க்கும் நெட்டிசன்கள்!!

இவர் நடித்த அந்த கதாபாத்திரம் மிகவும் பிரபலம் அடைந்ததால் இவரை ரசிகர்கள் “மைனா” நந்தினி என்றே அழைத்து வருகின்றனர். இவர் அதன் பிறகு பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று தனக்கு என்று ஒரு ரசிகர் கூட்டத்தினை உருவாக்கி கொண்டார். இப்படியாக இருக்கும் போது இவர் நடிகர் யோகேஷுடன் ஒரு டான்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது இருவருக்கும் காதல் துளிர்த்தது. பின், இருவரும் தங்களது பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இவர்களுக்கு கடந்த ஆண்டு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இப்படியாக இருக்க, நடிகர் யோகேஷ் தமிழ் சினிமாவின் பிரபல பழம்பெரும் நடிகரான ராமதாஸின் பேரன் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ராமதாஸ் அப்போது முன்னணி நடிகர்களாக இருந்த சிவாஜி மற்றும் எம்ஜிஆர் ஆகியோருடன் பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து இந்த செய்தி இணையத்தில் தீயாக பரவி வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here