லாஸ்லியா நீங்க அப்பவே அப்படியா?? வைரலாகும் பள்ளி வயது புகைப்படம்!!

0
தலைகீழாக தம் பிடித்து நின்று பிக் பாஸ் லாஸ்லியா செய்த காரியம்., சமந்தாவ மிஞ்சிருவீங்க போலயே!!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமான நடிகை லாஸ்லியா பற்றி நம் அனைவருக்கும் தெரியும். ஆனால், அவர் இது வரை தனது சிறு வயது புகைப்படத்தினை பதிவிட்டதில்லை. தற்போது அவரது சிறு வயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நடிகை லாஸ்லியா

தமிழ் திரையுலகில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமானவர் தான் நடிகை லாஸ்லியா. இவர் இலங்கை நாட்டினை சேர்ந்தவர். இவர் அங்கு ஒரு செய்தி வாசிப்பாளராக இருந்து வந்தார். இவர் முதன் முதலாக விஜய் தொலைக்காட்சியின் மூலமாக தான் மக்கள் மத்தியில் பிரபலமானார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இருந்து இவர் மக்களுக்கு மிகவும் பிடித்த ஒரு போட்டியாளராக இருந்து வந்தார். அனைவரிடமும் அன்பாக பழகிய குணம் இவரை அனைவருக்கும் பிடிக்கும்படி செய்தது.

முகப்பருவே இல்லாத சருமத்தினை பெற வேண்டுமா?? இத மட்டும் ட்ரை பண்ணி பாருங்க!!

இவர் ஒரு டாஸ்கில் தனது அக்கா குறித்து கூறும் போது அனைவருமே கண் கலங்கி விட்டனர். இப்படியாக இருக்கும் போது இவர் சக போட்டியாளரான நடிகர் கவினை விரும்பினார். இது அதே வீட்டில் இருந்த சாக்ஷி, இயக்குனர் சேரன் ஆகியோருக்கு பிடிக்காமல் இருந்தது. சேரன் இருவரையும் போட்டியில் கவனம் செலுத்தும்படி அறிவுறுத்தினார். இதனை கேட்காமல் இருந்து வந்த லாஸ்லியா அவரது அப்பா வந்து திட்டி அறிவுரை கூறியதும் ஏற்று கொண்டார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பின், தனது போட்டிகளில் கவனம் செலுத்தி வந்த லாஸ்லியா கடைசி வரை கடுமையான போட்டியாளராக இருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்ததும் அவருக்கு பல பட வாய்ப்புகள் கிடைத்தது. தற்போது இவர் நடிகர் அர்ஜூனுடன் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படியாக இருக்க, லாஸ்லியாவின் சிறு வயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here