8 வயதில் தந்தையால் பாலியல் தொந்தரவு.., நடிகை குஷ்பு பரபரப்பு பேட்டி!!

0
8 வயதில் தந்தையால் பாலியல் தொந்தரவு.., நடிகை குஷ்பு பரபரப்பு பேட்டி!!
8 வயதில் தந்தையால் பாலியல் தொந்தரவு.., நடிகை குஷ்பு பரபரப்பு பேட்டி!!

நடிகை குஷ்பு தன்னுடைய எட்டு வயதில் நடந்த அதிர்ச்சி சம்பவம் ஒன்றை சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

நடிகை குஷ்பு

தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் பல ஹிட் படங்களை கொடுத்து, ரசிகர்கள் கோயில் கட்டி கும்பிடும் அளவுக்கு புகழ் வாய்ந்தவராக விளங்கியவர் தான் நடிகை குஷ்பு. படத்தின் தயாரிப்பாளர், நடிகையாக இருக்கும் இவர் அரசியல்வாதியாக செயல்பட்டு வருகிறார். பல கட்சிகளை கடந்து வந்த குஷ்பு தற்போது பாஜக கட்சியில் பணிபுரிந்து வருகிறார். சமீபத்தில் அவரை தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்நிலையில் அண்மையில் நடந்த பேட்டி ஒன்றில் நடிகை குஷ்பு தன்னுடைய எட்டு வயதில் நடந்த அதிர்ச்சி சம்பவம் ஒன்றை கூறியுள்ளார். அவர், என்னுடைய அப்பா, என் அம்மாவை அதிகமாக அடிப்பார். சிறு வயதில் ஆண் பிள்ளையோ, பெண் பிள்ளையோ பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டால், அதனால் ஏற்படும் பயம் அவர்களின் வாழ்க்கை முழுவதும் துரத்தி கொண்டே இருக்கும். ஒரு ஆண்மகன் கட்டுன மனைவியை அடிப்பது, பெற்ற குழந்தைகளை பாலியல் கொடுமை செய்வதையெல்லாம் பிறப்புரிமை என்று நினைத்திருக்கலாம். எனக்கு ஒரு 8 வயது இருக்கும். அந்த வயதில் என்னுடைய அப்பாவால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டேன்.

அப்படி போடு.., 90ஸ் கிட்ஸ் ரெடியாகுங்க.., கோலங்கள் பார்ட் 2 வரப்போகுதாம்.., திருமுருகனின் அசத்தல் அப்டேட்!!

அதை எதிர்த்து கேள்வி கேட்க என்னால் முடியவில்லை. ஏனென்றால் நான் ரொம்ப சின்ன பொண்ணு. அம்மாவிடம் கூறினால் நம்புவார்களா? என்று தெரியவில்லை. அதற்கு காரணம் என் அம்மா கணவனவே கண்கண்ட தெய்வம் என்று சொல்லி வாழும் ஒரு ஜீவன். அதனால் அவரிடம் சொல்லல. தொடர்ந்து அப்படியே செய்து வந்தார். அவரை எதிர்த்து கேள்வி கேட்க எனக்கு 15 வயதில் தான் தைரியம் வந்தது. அப்புறம் எனக்கு 16 வயது ஆன போது எங்களை விட்டு சென்றுவிட்டார். அதன் பின்னர் அடுத்த வேளை சோற்றுக்காக என்ன செய்ய போகிறோம் என்று தெரியாமல் நின்றோம் என்று மனவலியுடன் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here