விபத்தில் சிக்கிய நடிகை குஷ்பு.., காலில் ஏற்பட்ட காயம்.., டெல்லிக்கு பறந்த சம்பவம்!!

0
விபத்தில் சிக்கிய நடிகை குஷ்பு.., காலில் ஏற்பட்ட காயம்.., டெல்லிக்கு பறந்த சம்பவம்!!
விபத்தில் சிக்கிய நடிகை குஷ்பு.., காலில் ஏற்பட்ட காயம்.., டெல்லிக்கு பறந்த சம்பவம்!!

90ஸ் கனவு கன்னியாக இருந்த நடிகை குஷ்புக்கு விபத்து ஏற்பட்டுள்ளதாக தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

நடிகை குஷ்பு:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் 90ஸ் காலத்தில் முக்கிய நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டிருந்தவர் தான் நடிகை குஷ்பு. தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் தளபதி விஜய் நடித்த வாரிசு திரைப்படத்தில் நடித்துள்ளார் என்று கூறப்பட்டது. ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய்யுடன் குஷ்பு எடுத்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வந்தது . ஆனால் வாரிசு படத்தில் குஷ்பு இருந்த காட்சிகள் எதுவும் இடம்பெறவில்லை.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதற்கு என்ன காரணம் என்று தற்போது வரை யாருக்கும் தெரியவில்லை. மேலும் நடிகை குஷ்பு நடிப்பது மட்டுமின்றி அரசியலிலும் புகுந்து விளையாடி வருகிறார். இந்நிலையில் நடிகை குஷ்பு குறித்து முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது சினிமா மற்றும் அரசியல் ஆகிய இரண்டிலும் பரபரப்பாக இருந்து வரும் நடிகை குஷ்புக்கு திடீர் விபத்து ஏற்பட்டுள்ளது.

தாறுமாறான workout., கூடவே கொஞ்சம் motivation.., ராஷ்மிகாவின் புதிய அவதாரம்.., அவரே வெளியிட்ட பதிவு!!!

இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, எனக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இப்படி இருக்கும் நிலையில் என்னால் ஓய்வு எடுக்க முடியவில்லை. எனக்குரிய பணியை நான் முடிக்க முடிக்க வேண்டும் என்பதால் டெல்லிக்கு கிளம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Kushboo Sundar (@khushsundar)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here