தளபதி 66 படப்பிடிப்பில் ராஷ்மிகா, குஷ்பு .. இணையத்தில் கசிந்த வீடியோ! வைரலாக்கும் ரசிகர்கள்!

0

தளபதி 66 திரைப்பட ஷூட்டிங் விறுவிறுப்பாக ஹைதராபாதில் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்து கொண்டிருக்கிறார். தற்போது ராஷ்மிகா தளபதி 66 ஷூட்டிங்கில் இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

தளபதி 66:

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை கொடுக்கவில்லை. தற்போது விஜய் தெலுங்கு இயக்குனரான வம்சியுடன் சேர்ந்து தனது 66-வது திரைப்படத்தில் விஜய் நடித்து கொண்டிருக்கிறார். இந்த திரைப்படமாவது ஹிட்டை கொடுக்க வேண்டும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர்.

தளபதி 66 திரைப்படம் தற்போது ஹைதராபாதில் வைத்து படமாக்கப்பட்டு வருகிறது. காமெடி, காதல் என அனைத்தும் கலந்த ஒரு கமர்சியல் திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தளபதி 66 திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், இந்த திரைப்படத்தில் சரத்குமார், பிரபு, பிரகாஷ்ராஜ், யோகி பாபு, நடிகர் ஷாம் என பல நடிகர்கள் நடிக்கவுள்ளனர்.

படுக்கையறை புகைப்படங்களை பகிர்ந்த ரைசா வில்சன் – திட்டி தீர்த்த ரசிகர்கள்! சூடான இணையதளம்!!

மேலும், தளபதி 66 திரைப்படத்தில் குஷ்பூவும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் குஷ்பூ மற்றும் ராஷ்மிகா மந்தனா இருவரும் இருக்கும்படியான வீடியோ சமூக வலை பக்கங்களில் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் ஆர்வத்தை தூண்டியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here