முன்னணி நடிகர்களை விமர்சித்த நடிகை கீர்த்தி ஷெட்டி.., என்னென்ன பேசி இருக்காங்க பாருங்களே!!

0
முன்னணி நடிகர்களை விமர்சித்த நடிகை கீர்த்தி ஷெட்டி.., என்னென்ன பேசி இருக்காங்க பாருங்களே!!

சமீபத்தில் சமூக வலைதளப் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார் நடிகை கீர்த்தி ஷெட்டி. அதில் சிலர் நடிகர் விஜய், சூர்யா குறித்து கேள்வி கேட்டு சர்ச்சையை கிளப்பியுள்ளனர்.

நடிகை கீர்த்தி ஷெட்டி:

தெலுங்கு சினிமாவில் உப்பென்னா என்ற படத்தின் மூலம் திரைக்கு வந்தவர் தான் நடிகை கீர்த்தி ஷெட்டி. இவர் நடித்த ஷ்யாம் சிங்கா ராய், பங்கர்ராஜூ போன்ற படங்கள் இவரின் சினிமா கேரியருக்கு முக்கிய அங்கமாக அமைந்தது. அது மட்டுமின்றி தமிழில் லிங்குசாமி இயக்கிய தி வாரியர் படத்தில் நடித்து ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

தற்போது வளர்ந்து வரும் நடிகையாக திகழ்கிறார். இதனை தொடர்ந்து பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் வணங்கான் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ரசிகர் மத்தியில் நிலவி வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் நடிகை கீர்த்தி ஷெட்டி சமூக வலைதளப் பக்கத்தில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

பொன்னியின் செல்வன் பட முக்கிய ரகசியம் அம்பலம் – பளிச்சென போட்டுடைத்த இயக்குனர் மணிரத்தினம்!!

அதில் சில ரசிகர்கள் தளபதி விஜய், நடிகர் சூர்யா மற்றும் மகேஷ்பாபு குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு கூல் ஆக பதிலளித்துள்ளார் நடிகை கீர்த்தி ஷெட்டி. அதாவது, நடிகர் சூர்யா நான் சந்தித்த மனிதர்களில் மிகவும் மரியாதை மிக்கவர். அதே போல் தளபதி விஜய், ஊக்கமளிக்கும் சூப்பர் ஸ்டார் என்றும் நடிகர் மகேஷ் பாபு ரீலிலும் சரி, ரியலிலும் சரி எப்பவும் சூப்பர் ஸ்டார் தான் என்று கூறியுள்ளார். தற்போது அவரை பேசியது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here