
விஜய் டிவியின் டிஆர்பி ரேட்டிங்கை ஹை பீக்கிற்கு கொண்டு சென்ற பாரதி கண்ணம்மா சீரியலில் அறிவு மணியாக நடித்தவர் தான் காவியா. இதைத் தொடர்ந்து, இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையாக நடித்து வந்த சித்ராவிற்கு பதிலாக நடித்து வந்தார். மேலும் இந்த சீரியலில் 3 வருடமாக நடித்து வந்த இவர் கடந்த மாதங்களில் இந்த சீரியலில் இருந்து விலகிச் சென்றார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
சினிமாவில் தனக்கு கிடைத்த தொடர் வாய்ப்புகளால் இந்த சீரியலில் இருந்து, விலகுவதாக கூறியிருந்தார். இந்நிலையில் ‘ரிப்புபரி’ திரைப்படத்தில் நடித்து, வெற்றிகரமாக வெள்ளி திரையில் தனது பயணத்தை தொடங்கியுள்ளார். இதுபோக இவர் அவ்வப்போது சோசியல் மீடியாவில் தன்னை பற்றிய அப்டேட்களை தன் ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் நியூ போஸ்ட் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் மாடர்ன் உடை அணிந்து ஸ்டன்னிங் லுக்கில் போஸ் கொடுத்தவாறு தனது புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார். மேலும் அதில் patternsss….!every WHERE? என்று கேப்ஷன் கொடுத்துள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் இவரின் போஸ்டுக்கு தங்களின் லைக்குகளை குவித்து வருகின்றனர்.