எனது உண்மையான மகனை கண்டுபிடியுங்கள் – ரசிகர்களை கேள்வியால் குழப்பிய பிக் பாஸ் பிரபலம்!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமான நடிகை கஸ்தூரி தற்போது தன் மகனுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

கஸ்தூரியின் மகன்:

தமிழ் மொழி திரைப்படங்களில் துணை நடிகை கதாபத்திரத்தில் நடித்து புகழ்பெற்றவர் கஸ்தூரி. ஆத்தா உன் கோயிலிலே என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் புகுந்தார். ராசாத்தி வரும் நாள், சின்னவர், செந்தமிழ்ப் பாட்டு, அமைதிப்படை மற்றும் பல வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் 3 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

கஸ்தூரிக்கு ஒரு மகனும் மகளும் இருக்கின்றனர். மகளுடன் இருக்கும் புகைப்படத்தை அவ்வப்போது வெளியிட்டு வந்த கஸ்தூரி, தனது மகனின் புகைப்படத்தை வெளியிடாமலே இருந்தார். இதனால் பலரும் உங்களது மகனின் புகைப்படத்தை காட்டுங்கள் என கேட்டதால் தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் கஸ்தூரியுடன் இரு பிள்ளைகள் இருக்கின்றனர். யார் எனது பையன் என்று கண்டுபிடியுங்கள் என கூறியுள்ளார். இருவருமே ஒரே மாதிரி இருப்பதால் யார் கஸ்தூரியின் மகன் என்று தெரியாமல் ரசிகர்கள் புலம்பி கொண்டிருக்கின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Kasthuri Shankar (@actresskasthuri)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here