ஜீ தமிழில் ஹீரோயினாக களம் இறங்கும் பாரதி கண்ணம்மா பிரபலம் – யாருன்னு பாருங்க!!

0
விரைவில் முடிவுக்கு வரும் விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியல் - வெண்பா கொடுத்த ஷாக் நியூஸ்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் அதிக ரசிகர்களை பெற்ற தொடர் பாரதி கண்ணம்மா.இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை கண்மணி. இவர் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடிகை கண்மணி:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் பாரதி கண்ணம்மா. பாரதியும் கண்ணம்மாவும் எவ்வாறு சேர்வார்கள் என்று பல விதமாக கேள்விகள் மக்களிடையே எழுந்த வண்ணம் உள்ளன. மேலும் சீரியலில் ஹீரோயினாக நடிக்கும் கண்ணம்மாவுக்கு தங்கையாக நடித்து வருபவர் நடிகை கண்மணி. ஆரம்பத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்து வந்த இவர் தற்போது நேர்மறையான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இந்த தொடரில் நடித்து வரும் ஒரு சில நடிகர்கள் புதிய சீரியல்களில் கமிட்டாகி நடித்து வருகின்றனர். இவர்களின் வரிசையில் நடிகை கண்மணியும் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒரு புதிய சீரியலில் ஹீரோயினாக நடிக்க கமிட் ஆகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த சீரியலில் இவருக்கு ஜோடியாக நடிகர் அருண் பத்மநாபன் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதை கேள்வி பட்ட நடிகை கண்மணியின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here