பிரபல சினிமா இயக்குனரும், திரைப்பட நடிகருமான மாரிமுத்து இன்று (செப்டம்பர் 8) மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். சன் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ‘எதிர்நீச்சல்’ சீரியலில் ஆதி குணசேகரன் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமான நடிகர் மாரிமுத்துவின் திடீர் இறப்பு ரசிகர்கள் மற்றும் திரையுலகத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்த நிலையில் மாரிமுத்துவின் மரணம் குறித்து அவருடன் நடித்து வரும் நடிகை கனிகா நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ‘இன்று காலை எதிர்நீச்சல் சீரியல் ஷூட்டிங்கிற்கு வழக்கம் போல கிளம்பினேன். ஷூட்டிங் ஸ்பாட்டில் வைத்து மேக்அப் போட்டு கொண்டிருக்கும் போது மாரிமுத்து சார் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார் என்று ஒரு அழைப்பு வந்தது. அடுத்து கொஞ்ச நேரத்திற்குள் அவர் மரணமடைந்ததாக செய்தி வந்தது.
அமெரிக்க அதிபரை சந்திக்கும் முன் மோடி செய்த செயல்…,காரணம் என்னவா இருக்கும்?
என்னால் நம்ப முடியவில்லை. அவர் ஒரு நல்ல மனிதர். நீங்கள் சீரியலில் பார்ப்பது போல இல்லை மாரிமுத்து சார். பெண்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தெரிந்தவர். என்னிடம் எப்போதும் மகனைப் பற்றி கேட்பார். குடும்பத்தைப் பற்றி விசாரிப்பார். இனி அவர் இல்லாமல் எப்படி சீரியலில் நடிக்கப் போகிறோம் என்பதை நினைக்க கஷ்டமாக இருக்கிறது. அவரது குடும்பத்தை எப்படி ஆறுதல் செய்வது என்று தெரியவில்லை’ என பேசி இருக்கிறார்.