படத்துக்காக முழு சொத்தையும் அடமானம் வைத்த கங்கனா ரனாவத்.., பாலிவுட் நடிகை குமுறல்!!!

0
படத்துக்காக முழு சொத்தையும் அடமானம் வைத்த கங்கனா ரனாவத் .., பாலிவுட் நடிகை குமுறல்!!!
படத்துக்காக முழு சொத்தையும் அடமானம் வைத்த கங்கனா ரனாவத் .., பாலிவுட் நடிகை குமுறல்!!!

பாலிவுட் வட்டாரங்களில் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை கங்கனா ரனாவத். இவர் 2006ம் ஆண்டு ரிலீஸான கேங்ஸ்டர் திரைப்படம் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார் கங்கனா ரனாவத். இதனை தொடர்ந்து ஷக்கலக்க பூம் பூம், லைஃப் இன் ஏ மெட்ரோ, ஃபேஷன், ஏக் நிரஞ்சன், ஒன்ஸ் அப்பான் ஏ டைம் இன் மும்பை, தனு வெட்ஸ் மனு உட்பட பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதே போல் தமிழில் ஜெயம் ரவியுடன் தாம் தூம் படத்தில் நாயகியாக நடித்த கங்கனா, தலைவி படத்தில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் கேரக்டரில் நடித்து மாஸ் காட்டியிருந்தார். படம் பல மொழிகள் வெளியாகி அமோக வரவேற்பை பெற்று தற்போது மீண்டும் ஒரு அரசியல் வாதியான இந்திரா காந்தி வேடத்தில் நடிப்பதாக சமீபத்தில் கூறியிருந்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், இந்தியாவின் இரும்பு பெண்மணி என்று அழைக்கப்படும் இந்திரா காந்தியின் கதாபாத்திரத்தில் நான் நடித்து வருகிறேன்.

ஆல் ஏரியாவிலும் அய்யா கில்லிடா.., சொல்லி அடிக்கும் வாரிசு படத்தின் வசூல்!!

இந்திரா காந்தி கடந்த 1977 ஆம் ஆண்டு இந்தியாவில் எமர்ஜென்சி பீரியடை அமல் படுத்தியது குறிப்பிடத்தக்கது. இந்த எமர்ஜென்சி பிரியடை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் தான் எமர்ஜென்சி. இந்த நிலையில் படத்தை குறித்து நடிகை கங்கா நான் மனம் திறந்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, எமர்ஜென்சி படத்தின் ஷூட்டிங் முடிந்து விட்டது. இந்த படத்திற்காக எனது அனைத்து சொத்துக்களையும் அடமானம் வைத்துள்ளேன். நான் அடமானம் வைத்ததை யாரிடமும் சொல்லவில்லை என்றும், இது எனக்கு மறுபிறவி மாதிரி என்றும் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here