பாக்கியலட்சுமி சீரியல் நடிகைக்கு விபத்து., அவரே வெளியிட்ட பதிவால் ரசிகர்கள் அதிர்ச்சி!!

0
பாக்கியலட்சுமி சீரியல் நடிகைக்கு விபத்து., அவரே வெளியிட்ட பதிவால் ரசிகர்கள் அதிர்ச்சி!!

சின்னத்திரை ரசிகர் மத்தியில் சீரியல் நட்சத்திரங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அவர்களும் தங்களை பற்றிய அப்டேட்களை ரசிகர்களுக்கு கொடுத்து வருகின்றனர். அப்படி பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வரும் கம்பம் மீனா அவ்வப்போது இன்ஸ்டா பக்கத்தில் தன்னை பற்றிய தகவல்களை கொடுத்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது இவர் கொடுத்திருக்கும் அப்டேட் ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதாவது கையில் கட்டு போட்டு படுத்திருப்பது போன்ற புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். மேலும் அதில் நேற்று இரவு 8.30  மணிக்கு தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போய்விட்டது, எல்லாம் அவன் செயல் என கூறி என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டேன் என்றவாறு பதிவிட்டுள்ளார். அதை வைத்துப் பார்க்கும்போது நேற்று இரவு இவருக்கு ஏதோ பெரும் விபத்து ஏற்பட்டு இருப்பது போல் தெரிகிறது. மேலும் இவர் விரைவில் குணமடைய ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் இறைவனை பிரார்த்தித்து வருகின்றனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

தமிழகத்தில் 1,448 சிறுமிகள் குழந்தை பெற்றெடுத்த அவலம்., அதுவும் இந்த மாவட்டத்திலா? திடுக்கிடும் தகவல்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here