ச்சி.. இதுதான் ஆம்பள புத்தி – ரவீந்தர், மகாலட்சுமி திருமணம் குறித்து பதிவிட்ட பிக் பாஸ் பிரபலம்!

0
ச்சி.. இதுதான் ஆம்பள புத்தி - ரவீந்தர், மகாலட்சுமி திருமணம் குறித்து பதிவிட்ட பிக் பாஸ் பிரபலம்!

சீரியல் நடிகை மகாலட்சுமி மற்றும் தயாரிப்பாளர் ரவீந்தரும் அண்மையில் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் திருமணத்தை குறித்து முகநூலில் விமர்சித்தவர்களுக்கு பிக் பாஸ் பிரபலம் பதிலடி கொடுத்துள்ளார்.

நடிகை காஜல்:

தமிழ் சினிமாவில் சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து மக்களிடம் பிரபலமானவர் தான் நடிகை காஜல். இவர் தனது மாஜி கணவரான டான்ஸ் மாஸ்டர் சாண்டியை விவாகரத்து செய்து தனிமையில் வாழ்ந்து வருகிறார். அதன் பின்னர் தனியார் தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார். சில தினங்களுக்கு முன்பு சீரியல் நடிகை மகாலட்சுமி மற்றும் தயாரிப்பாளர் ரவீந்தரும் திருமணம் செய்து கொண்டனர்.

இந்த திருமணம் குறித்து சிலர் வாழ்த்துக்கள் கூறியும், சிலர் விமர்சித்தும் வருகின்றனர். அவ்வாறு விமர்சனம் செய்பவர்களுக்கு காஜல் பதிலடி கொடுத்துள்ளார். அதாவது முகநூலில் ஒரு சிலர் அண்மையில் திருமணம் செய்து கொண்ட சீரியல் நடிகை மகாலட்சுமி மற்றும் தயாரிப்பாளர் ரவீந்தர் திருமண புகைப்படத்தை பதிவிட்டு “என்னடா கிளிய வளத்து பன்னிகிட்ட குடுத்துட்டீங்க, பணம் பண்ற வேலை” எனவும் “மனசை Money purse-க்குள் ஒளிச்சி வெச்சிருக்காங்களா” என்றும் கருத்து பதிவிட்டுள்ளனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதை கண்ட நடிகை காஜல் பதிலடி கொடுக்கும் வகையில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். “அது எப்படி, நயன்தாராவை விக்னேஷ் சிவன் கல்யாணம் பண்ணிக்கிட்டாலும், நயன்தாரா மேல தான் தப்பு .. நடிகை மகாலட்சுமி ரவீந்தர கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் மகாலட்சுமி தா தப்பு.. என்ன ஒரு ஆம்பளத்தனம்” என்று பதிலடி கொடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here