
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகைகளில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகை காஜல் அகர்வால். நடிகர் விஜய், சூர்யா, அஜித், தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்த இவர் தற்போது உலக நாயகனுடன் இணைந்து இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். அதுபோக இன்னும் சில படங்களில் பிசியாக இருந்து வரும் காஜல் சமீபத்தில் தனது இணையதள மூலம் ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அப்போது ரசிகர் ஒருவர், நான் உங்களை அதிகமாக காதலிக்கிறேன், நம்ம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாம். உங்க ரிப்ளைக்காக காத்திருக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். அதற்கு காஜல், எல்லாமே சுலபமாக கிடைத்து விடாது. கொஞ்சம் effort போடுங்க என்று நெத்தியடி பதிலை கொடுத்துள்ளார்.