இந்திய சினிமா துறையில் முன்னணி நாயகியாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் காஜல் அகர்வால். இவர் தெலுங்கு திரையில் நாயகியாக அறிமுகமாகி பின் கோலிவுட் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். இந்நிலையில் இவர் உலகநாயகனின் நடிப்பில் உருவாகும் இந்தியன் 2 படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
எப்போதும் சினிமாவில் பிசியாக இருக்கும் இவர் கடந்த சில வருடங்களுக்கு முன் தொழில் அதிபர் கௌதம் கிச்சுலு என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு நீல் என்ற ஆண் உள்ளது. இந்த நேரத்தில் தனியார் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ள காஜலிடம் உங்கள் மகனுக்கு நீங்கள் நடித்த படங்களில் எந்தப் படத்தை முதலில் காட்டுவீர்கள் என கேட்டுள்ளனர்.
வரலட்சுமிக்கு கழுத்து எலும்பு உடைஞ்சிடுச்சு., இந்த சீன் எல்லாமே உண்மை – பாலா சொன்ன ஷாக் நியூஸ்!!
அதற்கு அவர் 8 வயது வரை என்னுடைய குழந்தைக்கு எந்த படத்தையும் காண்பிக்க போவதில்லை. அதன் பிறகு தான் நடித்துள்ள துப்பாக்கி திரைப்படத்தை தான் முதலில் பார்க்க வைப்பேன் என கூறியுள்ளார். தமிழ் திரையுலகில் இவருக்கு முதல் வெற்றியாக அமைந்த படம் துப்பாக்கி என்பதால் இவர் இப்படி கூறி இருக்கலாம் என்ற கருத்து ரசிகர்கள் மத்தியில் உலாவி வருகிறது.