நம்ம ஜோதிகா தங்கை.. அதாங்க சூர்யா மச்சினிச்சியை பார்த்து இருக்கீங்களா?? புகைப்படம் உள்ளே!!

0
நம்ம ஜோதிகா தங்கை.. அதாங்க சூர்யா மச்சினிச்சியை பார்த்து இருக்கீங்களா?? புகைப்படம் உள்ளே!!
நம்ம ஜோதிகா தங்கை.. அதாங்க சூர்யா மச்சினிச்சியை பார்த்து இருக்கீங்களா?? புகைப்படம் உள்ளே!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஜோதிகா, பல ஆண்டுகளுக்கு கழித்து மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார். அதுவும் நயன்தாராவை போல ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் நடித்து வருகிறார். இவர் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து எக்கசக்க ஹிட் படங்களை கொடுத்துள்ளார். அதுமட்டுமின்றி தன்னுடன் சேர்ந்து பல படங்களில் ஜோடியாக நடித்த சூர்யாவை காதலித்து கல்யாணம் செய்து கொண்டார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இவர்களுக்கு திருமணமாகி 20 ஆண்டுகள் கடந்த போதிலும் அவர்களுக்குள் இருக்கும் காதல் சிறிதளவு கூட குறையவே இல்லை. பல காதல் ஜோடிக்கு இவர்களே முன் உதாரணமாக இருந்து வருகின்றனர். மேலும் ஜோதிகாவுக்கு நக்மா என்ற ஒன்று விட்ட சகோதரி இருக்கிறார் என்று எல்லோருக்கும் தெரியும்.

ஏனென்றால் அவரும் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் தான். ஆனால் ஜோவிற்கு ரோஷினி என்று இன்னொரு தங்கையும் இருக்கிறார். அவரும் ஒரு நடிகை தான். சூப்பர் ஸ்டாருடன் சேர்ந்து நடித்திருக்கிறார் என்று சொன்னால், அது எத்தனை பேருக்கு தெரியும். ஆமாங்க நவரச நாயகன் நடித்த சிஷ்யா படத்தில் நடித்து சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.

அட., நம்ம முத்து படத்தில் ரஜினி கூட நடிச்ச சுபஸ்ரீயா இது.., ஆளே அடையாளம் தெரியாமல் போய்ட்டாங்களே!!

அதன் பிறகு தெலுங்கு சூப்பர் ஸ்டாரான சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடித்துள்ளார். அதன் பின் ஒரு சில படங்களில் நடித்த இவர் சில காரணங்களால் படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டார். இந்நிலையில் ஜோதிகாவின் தங்கையான ரோஷினி புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் சூர்யாவுக்கு இப்படியொரு மச்சினிச்சியா? என்று கலாய்த்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here