தன் அம்மாவுடன் குத்தாட்டம் போட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா- இன்ஸ்டா போஸ்ட் வைரல்!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் மீனா கதாபாத்திரத்தில் நடித்து கொண்டு இருப்பவர் நடிகை ஹேமா ராஜ்குமார். இவர் ரீலிஸ் ஒன்றை செய்து தனது இன்ஸ்டா பக்கத்தில் போஸ்ட் செய்துள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.

ஹேமா ராஜ்குமார்:

நடிகர் விஷால் மற்றும் நடிகை காஜல் அகர்வால் நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியான படம் பாயும் புலி. இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் நடிகை ஹேமா ராஜ்குமார். மேலும் அவர் தனது 22வது வயதில் திரை உலக வாழ்க்கையை ஆரம்பித்தார். 2016 ஆம் ஆண்டு வெளிவந்த ஆறாது சினம் திரைப்படத்தில் நெகட்டிவ் கலந்த ரோலில் நடித்துள்ளார். மேலும் அதன் பிறகு சின்ன திரையில் கால் பதித்தார்.

தற்போது விஜய் டிவியில் குடும்பங்கள் கொண்டாடும் தொடராக இருந்து வருவது பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த தொடரில் மீனா என்ற கதாபாத்திரத்தில் இரண்டாவது மருமகளாக நடிகை ஹேமா ராஜ்குமார் நடித்து வருகிறார். இந்த தொடரில் இவருக்கு என்று தனி ரசிகர்கள் உள்ளனர். மேலும் படப்பிடிப்புக்கு இடையில் இந்த தொடரில் அம்மாவாக வரும் நடிகை ஸ்ரீவித்யாவுடன் ஒரு பாட்டுக்கு ரீல்ஸ் செய்து அதை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அந்த ரீல்ஸ் லைக்குகளை அள்ளி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here