ஒரு வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்த ஹன்சிகா – மகிழ்ச்சியில் அவரது ரசிகர்கள்!!

0

நடிகை ஹன்சிகா மோத்வானி இந்த வருடம் வரிசையாக படம் நடிக்க உள்ளதாக தன் ரசிகர்களுடன் இன்ஸ்டாவில் பகிர்ந்து உள்ளார். மேலும் இந்த ஆண்டு அனைவருக்கும் இனிய ஆண்டாக அமைய வேண்டும் என்றும் வாழ்த்தியும் உள்ளார்.

நைட்டியால் பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டில் நடந்த அக்கபோரு.., Revenge எடுக்கும் மீனா!!

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

நடிகை ஹன்சிகா மோத்வானி:

சிறு வயதிலேயே தான் நடிப்பு திறமையை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியவர் தான் நடிகை ஹன்சிகா மோத்வானி. ஹிந்தி, தெலுங்கு,கன்னடம் மொழிகளில் நடித்து வந்த இவர், தமிழில் நடிகர் தனுஷ் நடித்த மாப்பிள்ளை படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். அந்த படத்திற்கு பிறகு தமிழில் அடுத்தடுத்து வெற்றி படங்களில் நடித்து வந்தார். மேலும் இவரது ரசிகர்கள் இவரை குட்டி குஷ்பு என்று செல்லமாக அழைத்து வந்தனர். ஆனால் சென்ற வருடம் தனக்கு ஒரு படம் மட்டுமே கைவசம் உள்ளது என்று கூறி தன் வருத்தத்தை தெரிவித்து இருந்தார்.

ஒரு வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்த ஹன்சிகா - மகிழ்ச்சியில் அவரது ரசிகர்கள்!!
ஒரு வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்த ஹன்சிகா – மகிழ்ச்சியில் அவரது ரசிகர்கள்!!

தற்போது நடிகை ஹன்சிகா இன்ஸ்டா பக்கத்தில் இந்த ஆண்டு 9 படங்களில் நடிக்க இருப்பதாகவும், மேலும் தற்போது கையில் பார்ட்னர், ரவுடி பேபி, மை நேம் இஸ் சுருதி, 105 நிமிடங்கள், மகா ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாராக உள்ளதாகவும் தெரிவித்து உள்ளார். மகா படத்தில் நடிகர் சிம்புவும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இது தவிர இன்னும் சில படங்களில் கமிட் ஆகி உள்ளார். இந்த மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்து இந்த ஆண்டு எனக்கு மகிழ்ச்சிகரமான ஆண்டாக தொடங்கி உள்ளது என்று கூறியுள்ளார். இதை பார்த்த அவரது ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here