பொதுவாக வெள்ளித்திரையில் பட வாய்ப்பு கிடைக்காத பட்சத்தில் பிரபல நடிகைகள் சின்ன திரைக்கு என்ட்ரி கொடுப்பது வழக்கம். அப்படி இல்லாவிட்டால் சினிமாவுக்கு பல வருடங்கள் கேப் விட்டு விட்டு மீண்டும் சீரியலில் ரீ என்ட்ரி கொடுப்பார்கள். அப்படி திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்து அசதி வந்தவர் தான் நடிகை அருணா.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இவர் ஜீ தமிழில் மீனாட்சி பொண்ணுங்க என்ற சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். ஆனால் சில காரணங்களால் தற்போது இவருக்கு பதிலாக நடிகை ஸ்ரீரஞ்சினி நடித்து வருகிறார். இப்படி இருக்கையில் தற்போது மீண்டும் ஒரு நடிகை இதில் இருந்து விலகியுள்ளாராம். அதாவது இதில் ”யமுனா” என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த காயத்ரி யுவராஜ் அண்மையில் தனது 2வது கர்ப்பத்தை அறிவித்திருந்தார். இதை தொடர்ந்து பிரசவத்திற்காக தற்போது இதிலிருந்து விலகியுள்ளார். மேலும் இவருக்கு பதிலாக காவியா என்ற புதுமுக நடிகை நடிக்க கமிட்டாகியுள்ளாராம்.