
ரசிகர்களின் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகி வந்த பாரதி கண்ணம்மா சீசன் 1 சீரியல் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து தற்போது பாரதி கண்ணம்மா 2 சீரியல் தொடங்கி விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இதில் எதிரும் புதிருமாக இருந்து வந்த பாரதி மற்றும் கண்ணம்மா இருவருக்கும் இடையில் தற்போது காதல் உணர்வு மலர்ந்துள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இப்படி இருக்கையில் தற்போது புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவை வைத்து பார்க்கும் போது பாரதிக்கு கண்ணம்மா மீது இருந்து வெறுப்பு இனி காதலாக மாறும் என தெரியவருகிறது. இப்படி பாசிட்டிவ் வைப்பில் போய்க்கொண்டிருக்கும் இந்த் சீரியலின் அடுத்த கட்ட நகர்வை இன்னும் சூடாக்க இதில் தரமான வில்லி களமிறங்க உள்ளார்.
அவர் வேறு யாரும் இல்லை பாரதியின் மீது அதீத அன்பை சீசன் 1 ல் வெளிப்படுத்திய வெண்பா தான் அது. வெளிநாட்டில் இருந்து படிப்பை முடித்து விட்டு வரும் வெண்பா தனது அத்தை மகனான பராதியை காதலிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனா பாரதி கண்ணம்மாவை காதலிப்பாராம்.இதனால் இவர்களை பிரிக்க மீண்டும் தனது வில்லத்தனத்தை கையில் எடுப்பாராம்.