‘பாரதி கண்ணம்மா’ பிரபலத்துடன் நெருக்கமாக இருக்கும் நமீதா – இதுதான் விஷயமா??

0
சின்னத்திரை தொடரில் இருந்து வெளியேறிய பாரதி கண்ணம்மா வெண்பா - ரசிகர்கள் ஷாக்!!

பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் வெண்பா. ஏற்கனவே இவர் மக்கள் மத்தியில் பிரபலமான நிலையில் தற்போது நமிதாவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

வெண்பா

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது பல விறுவிறுப்பான கட்டங்கள் ஒளிபரப்பாகி வருகிறது. பாரதிக்கு இப்பொழுது கண்ணம்மா பற்றிய சில உண்மைகள் தெரியவருகிறது. ஆனால் லட்சுமி அம்மா தான் கண்ணம்மா என்று தெரியாது. மேலும் ஹேமாவை ஊரை விட்டே அழைத்து செல்ல முயற்சிக்கிறார்.

கண்ணம்மா தான் வேலையை விடும் அளவிற்கு சென்று விட்டார். இதனால் பாரதி மனது மறுவாரா?? இல்லை ஹேமாவை அழைத்து சென்று விடுவாரா?? என்ற குழப்பம் ரசிகர்கள் மனதில் உள்ளது.

இப்படி கதை சுவாரசியமா நகர்ந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் இந்த லாக்டவுனால் சீரியல் நிறுத்தப்போவதை அடுத்து என்ன நடக்க போகிறதோ என்று ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளன.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த சீரியலை விறுவிறுப்பாக்கியதற்கு முக்கிய பங்கு வெண்பாவிற்கு தான். இவ்வளவு வில்லத்தனங்களை ஒருவரால் செய்ய முடியுமா என்று கேட்டால் பதில் சொல்வது கஷ்டம் தான்.

ஏனெனில் மக்கள் மனதில் அந்த அளவிற்கு இடம் பிடித்து விட்டார் வெண்பா. ஏற்கனவே வெண்பாவிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்க தற்போது அவர் சில நாட்களுக்கு முன்பு நமிதாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here